கடந்த காலங்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த வருடம் கைது செய்யப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி பாலேந்திரன் வழக்கு தாக்கல் இன்றி 362 நாட்கள் தடுப்புக் காவலின் பின் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல் இன்றி 182 முதல் 189 பேர் வரையானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனவே, இவர்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்? என்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "புதிய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆகின்றன. இந்நிலையில், நாம் முக்கிய சில நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில், தடுத்துவைக்கப்பட்டுள்ளோர் விவகாரத்தில் வழக்குத் தொடர முடியுமா? அவர்களை விடுதலை செய்வதற்கு ஏதுவான நிலை காணப்படுகின்றதா? என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளேன். அந்த அறிக்கை இன்னும் ஓரிரு வாரங்களில் கிடைக்கும். அதன்பின்னர் தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். குறிப்பாக விடுதலை செய்யப்பட்டால், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும். அது அடிப்படைஉரிமை.” என்றுள்ளார்.

0 Responses to பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!