இலங்கை தமிழர்கள் பிரசனையில் 10கோடி தமிழர்களையும்ஒன்றிணைக்க சர்வதேச தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டுக்கான அடையாளச் சின்னம் (இலட்சினை) வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இலட்சினையை வெளியிட்டு பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,....''கோவையில் நடைபெறவுள்ள மாநாட்டை நடத்தவும், உலகம் முழுவதும் உள்ள 10கோடி தமிழர்களை ஒருங்கிணைத்து இலங்கை தமிழர்கள் பாதுகாப்பை, உரிமையை பெற்றுத்தரவும் 'சர்வதேச தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்.
வருகிற 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,7 தேதிகளில் கோவையில் நடைபெறவுள்ள ''உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு" இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தருவற்கான மாநாடாக இருக்கும். இலங்கைத்தமிழர் பிரசனையில் இனி இந்திய அரச நல்லது செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது.
உலகெங்கும் உள்ள 10கோடி தமிழர்கள் ஒன்றிணைந்து போராடினால்கள் விடிவு பிறக்கும், தமிழர்கள் ஒன்றுபடாதது தான் பிரசனைக்கு காரணம்."என்றூர் டாக்டர் கிருஷ்ணசாமி.



0 Responses to ''சர்வதேச தமிழர்பாதுகாப்பு இயக்கம்" தொடக்கம்!