Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் உள்ள ஏனைய சிறுபாண்மைத் தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து ஒரு கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இப்பேச்சுவார்த்தைகள் கொழும்பு ரேணுகா விடுதியில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, புளொட் அமைப்பின் தலைவர் டி. சித்தார்த்தன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பிரதிநிதிகள் ( ஈ.பி.ஆர்.எல்.எப். ஸ்ரீதரன் பிரிவு) ஆகியோர் உள்ளிட்ட ஆறு கட்சிகள் சந்திப்பில் பங்கேற்றுள்ளன.

வடக்கு மக்களை மீள் குடியேற்றல், கிழக்கு மாகாண காணி விநியோகம், எதிர்காலத் தேர்தல்களின் போது தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளிட்ட எட்டு விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

எனினும் ஆறு கட்சிகளும் எதிர் வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்துவது என முடிவு காணப்பட்டுள்ளது.

0 Responses to கூட்டமைப்பு தலைமையில் சிறுபாண்மை தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடிப் கூண்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com