Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றக முடியாத என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார முறையை நீக்க வேண்டும் என்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும் 6 மாதங்களில் பதவி விலகுவதற்காக தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டியதில்லை என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் சரத் பொன்சேகாவை சந்தித்து பேசிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை அடுத்து ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ரனில் விக்கிரமசிங்க போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் சார்பில் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலி; போட்டியிடக் கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது

0 Responses to ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்றக முடியாது - சரத் பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com