Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயக மண்மீட்புப் போரிற்காய் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் மாவீரர் வாரம் வெள்ளி நவம்பர் 20, 2009 தொடங்கியது.

அன்று, ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் மூன்று வளாகங்களான இசுகாபரோ, மிசிசாகா, சேன்ட் ஜோர்ஜ் இணைந்து மாவீரர் நாள் நிகழ்வினை நடத்தினர்.

ரொறன்ரோ பல்கலைகழகத்தின் இசுகாபரோ வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர் கலந்து கொண்டனர். பிற்பகல் 7:30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது. கனடிய மற்றும் தமிழீழக் கொடியேற்றங்களைத் தொடர்ந்து மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களால் பல எழுச்சிமிக்க நாடகங்களும் நடனங்களும் நிகழ்த்தப்பட்டன. மாணவர் பல உணர்வுமிக்க பேச்சுக்களையும் வழங்கினர்.
தமிழீழம் மலரும், அது காலத்தின் கட்டயாம். அதற்காய், தமிழராகிய நாம், ஒற்றுமையாய், எழுச்சியுடன் எழுந்து உழைக்க வேண்டும். ஈழத்தில் அவலப்படும் மக்களை நாம் காப்பாற்ற வேண்டும்,

அவர்களை தமிழீழத்தில் வாழ நாம் வழிஅமைக்க வேண்டும் போன்ற கருத்துகளை பேச்சுகளை முன்வைத்தன.
நிகழ்வின் நிறைவில் தமிழீழம் மலரும்வரை நாம் ஓயப்போவதில்லை என்று மாணவர் உறுதிமொழி எடுத்தனர். கனடிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடி இறக்கத்துடன் பிற்பகல் 9:30 மணிக்கு மாவீரர் நாள் நிறைவு பெற்றது.

Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com
Image Hosting by PictureTrail.com

0 Responses to ரொறன்ரோ பல்கலைக்கழக மாவீரர் நாள் நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com