Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள் மீண்டும் முகாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூன்றாவது முகாமிற்கு நாங்கள் மாற்றப்படுகின்றோம் என்று யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள் விசனம் தெரிவித்துள்ளானர்.

சிறீலங்காப் படையினரின் போர் நடவடிக்கையால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தடுப்பு முகாமில்அடைக்கப்பட்ட மக்கள் மீளக்குடியமர்வு என்றபெயரில் சொந்த மாவட்டங்களில் தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் யாழ்பாணத்தில் மீளக்குடியமர்த்த கொண்டு செல்லப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தின் மிருசுவில் கொடிகாமம் இராமாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மணற்காட்டு முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்கி கிழக்கினை சேர்ந்த 920 மக்கள் மூன்றாவது முகாமாக மணற்காடு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to யாழ் வடமராட்சி கிழக்கு மக்கள் மீண்டும் முகாம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com