Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் கேரள மாநிலத்தை சார்;ந்த கண்ணி வெடி அகற்றும் குழு ஒன்று மன்னாரில் அரி வயல் பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் வேலையில் புதிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்ணி வெடி அகற்றலுக்கான சுவிpஸ் அமைப்பு என்னும் பெயர் கொண்ட இவ் அமைப்பு அரிசி கிண்ணம் பகுதில் தற்போது பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இதுவரை 2 லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பில் கண்ணி வெடிகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரை மொத்தமாக தாம் 4000 ஆமற்பட்ட மிதி வெடிகளையும் மற்றும் 15 வரையான தாங்கி எதிர்ப்பு கண்ணிகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் தொவித்துள்ளது

பெரிய தம்பனை மற்றும் பண்டி விரிச்சாhன் அகிய பகுதிகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவ்விடம் தற்போது மீள் குடியேற்றத்துக்கு தயாராக உள்ளதாகவுமு; அதில் வசித்த 600 குடும்பங்களை மீளக் குடியேற்றக் கூடிய நிலையில் தற்போது அரசால் வவுனியா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இவ் கண்ணி வெடி அகற்றும் அமைப்பின் இயக்குநர் மேயர் றாயு அங்கு சென்றிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தாம் விடுதலைப்புலிகளின் ஜெனி கண்ணி வெடிகளுடன் பரீட்சயப்பட்டுள்ளபோதும் தற்போது இழவழுதி என எழுதப்பட்ட புதிய வகை ஒன்றை கண்டு எடுத்து வருவதாகவும் இது தமக்கு பரீட்சயம் அற்றதால் அவற்றை அகற்றுவதில் சிக்கல் நீடிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதிவு

0 Responses to மன்னாரில் கேரளக் குழு கண்ணி வெடி அகற்றலில்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com