வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியொருவரை நியமிக்கவுள்ளதாகவும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை கட்டியெழுப்புவதற்காக விசேட ஐந்தாண்டு திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், உட்பட பல்வேறு தரப்பட்ட மக்களையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது, “கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாகும். இந்த இரண்டு மாவட்டங்களையும் மீளக் கட்டியெழுப்ப பாரிய பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இங்கு சில அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இன்னும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள். சிவில் சமூகத்தினருக்கும், படையினருக்கும் இதற்காக வழங்கும் ஒத்துழைப்புக்களுக்கு நாம் நன்றி கூறக் கட்டமைப்பட்டுள்ளோம். நன்றி கூறுவதன் மூலமாக மட்டும் நாம் திருப்திப்பட முடியாது. இந்த மாவட்டங்களில் மென்மேலும் வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டில் இலங்கையின் மிக வறுமை நிறைந்த பிரதேசமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் நிகழ்ந்தன. எனினும் 2014 ல் மொனராகலை மாவட்டமே மிக வறிய மாவட்டமாகக் கணிக்கப்படுள்ளது. இதற்கிணங்க இந்த மாவட்டங்களில் சில வேலைத் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்படவில்லை என்பதைக் குறிப்பிட முடியும்.
பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் சிவில் சமூகத்தினரிடம் மாற்றலாக வேண்டும் என்ற தேவையே தற்போது உள்ளது. இதற்காக நாம் சிவில் அமைப்புக்களைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பொறுப்பை சிவில் சமூகம் பொறுப்பேற்க வேண்டும்.
வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்கள் போலன்றி இங்கு சமூகத்தை நாம் மீள உருவாக்க வேண்டியுள்ளது. அதற்காக இப்பிரதேசங்களின் சிவில் சமூகத்தை நாம் பலப்படுத்த வேண்டியது அவசியம். எதிர்வரும் ஐந்து வருடங்களில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென விசேட வேலைத்திட்டமொன்றைச் செயற்படுத்த தீர்மானித்துள்ளோம்.
யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் மன நிலையில் மாற்றம் அவசியம், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்தி சுபீட்சமான எதிர்காலத்தைப் பெற்றுக் கொடுக்க அரசியல் பொறிமுறையொன்றை சிவில் சமூகம் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. எமக்கு மக்களிடம் இருந்தும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் கிடைக்கப் பெற்றுள்ள மகஜர்களை கவனித்திற்கொண்டு செயற்படவுள்ளோம்.
நான் வடக்கிற்கு விஜயம் செய்து இங்குள்ள பிரச்சினைகளை நேரில் கண்ட பின்னர் வடக்கின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தனியான அதிகாரியொருவரை பிரதமர் செயலகத்தில் நியமிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். அவர் மூலம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம்.” என்றுள்ளார்.

0 Responses to வடக்கு பிரச்சினைகளைக் கையாள சிறப்பு அதிகாரி; கிளி, முல்லை மாவட்ட அபிவிருத்திக்கு விசேட திட்டம்: ரணில்