Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழரின் தாகமாம் தமிழீழத்தை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானக் கருத்துக் கணிப்பு கனடா நாடு தழுவிய ரீதியில் சுறுசுறுப்பாக தற்போது நடைபெற்றுவருகிறது.

கனடா வாழ் ஈழத்தமிழர்கள் தவறாது சென்று தமது வரலாற்றுக் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று காலை 9.00 மணிமுதல் ஆரம்பமாகியுள்ளது. இது இன்று மாலை 9.00 மணிவரை வரை நடைபெறும். சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக காலை 9.00 மணிக்கு முன்பாகவே மக்கள் ஆவலுடன் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.

கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல, கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. இருந்தபோதும், வாக்களிக்கும் மக்களை தடுக்கும் நோக்குடன், வாக்களிக்கும் பதிவுகளை சிறீலங்கா அரசிடம் கையளிக்கப்படும் என "வன்னி பல்கலைக்கழக மாணவ சமூகம்" என்ற பெயரில் அறிவிக்கப்பட்டதாகக் கூறி, திட்டமிட்ட ரீதியில் கனடாவில் இயங்கும் இரண்டு தமிழ் வானொலிகள் போலிப் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக அறியப்பட்டுள்ளது.

இப்படியான ஒருபெயரில் எந்தவொரு அமைப்பும் வன்னியில் இல்லை என்பதும், இது திட்டமிட்ட சிறீலங்கா அரசின் கூலிகளால் செய்யப்படும் போலிப் பிரச்சார வேலை எனவும் செய்திகள் தற்போது எமக்கு கிடைத்துள்ளன.

இருந்தபோதும், மக்கள் இப்பிரச்சார நடவடிக்கையை பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் வாக்குச்சாவடிகள் நோக்கி சென்று கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரான்சில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளால் அதிர்ந்து போயிருக்கும் சிறீலங்கா அரசு எப்படியாவது கனடாவில் நடைபெறும் தேர்தலை தடுத்துவிட எண்ணுகின்றது என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

புலத்தில் வாழும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ள போராட்ட சக்கரத்தை நகர்துவதற்கு உடனடியாக விரைந்து சென்று வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

0 Responses to திட்டமிட்ட சிறீலங்காவின் எதிர்ப்பிரச்சாரத்தின் மத்தியிலும், கனடாவில் சுறுசுறுப்பாக நடைபெறும் வாக்களிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com