Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடாவில் வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்குப் கணிப்பு இன்று 19ம் திகதி சனிக்கிழமை 9மணிமுதல் மாலை 9.00 மணிவரை நடைபெறுகின்றதுகாலை முதல் உணர்வு பூர்வமாக உற்சாகத்துடன் மக்கள் தெடர்ச்சியாக சென்றவண்ணமுள்ளனர்.

மாலை 2.00 மணிவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். மதியத்துக்குப் பின்னர் மக்கள் குடும்பமாகவும் சாரை சாரையாக வந்து வாக்களிப்பதை காணக்கூடியதாக உள்ளது. வாகன வசதியில்லாதோருக்கு ஊர்சங்கங்கள் தொண்டர் அமைப்புகள் எனபன வாகன வசதிகள் செய்து கொடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

கனடியத் தமிழ் ஊடகங்கள் மட்டுமல்ல கனடியத் தேசிய ஊடகங்களும் இத்தேர்தலுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டவண்ணமுள்ளன. ஒரு நாட்டின் தேர்தல் நடைபெறுவதுபோல் மிக ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் நடைபெறுவதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது. இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் உள்ள கனடாவில் ஐம்பதாயிரம் மக்கள் வாக்களிக்கக்கூடும் என கனடிய தேசிய ஊடகம் ஒன்று செய்தி தெரிவித்துள்ளது.

காலம் காலமாக தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவந்த கனடாவின் தமிழ் வானொலி ஒன்று சிறிலங்கா அரசுக்கு துணையாக மக்களை குழப்புவதற்காக பொய்பிரச்சாரத்தில் ஈடுபட்டு துரோகத்துக்கு துணைபோகின்றது. ஆனால் அதனையும் தாண்டி மக்கள் வரவு அதிகரித்தவண்ணமுள்ளது.

குளிரையும் பொருட்படுத்தாது வயோதிபர்கள், நடக்க முடியாத அங்கவீனர்கள் கூட இவ்வாக்களிப்பில் கலந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளதுதேர்தல் கண்காணிப்பில் உள்ள வேற்றினத்தவர் இவர்களுடன் உரையாடிபோது இந்நிலையலும் இவர்களின் கடமையுனர்ச்சியை எண்ணிக் கண்கலங்கினார்மிகவும் நவீனத்துவப்படத்தப்பட்ட வாக்களிப்பு இயந்திரங்கள் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இந்த இயந்திரம் 6 கணப்பொழுதுக்கு ஒரு வாக்களிப்பு அட்டையை உள்வாங்ககின்றமை குறிப்பிடத்தக்கது. வாக்களிப்பு முடியும் நேரம் 9.00 மணியிலிருந்தே தேர்தல் முடிவுகள் அறியக் கூடியதாக இருக்கும் என கூறப்படுகின்றது. தேர்தல் முடிவடைந்ததும் ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஸ்காபுரோவில் அமைந்திருக்கும் பிரபல்யமான டெல்ரா விடுதியில் (2035 Kennedy - Delta Toronto East Hotel) பத்திரிகையாளர் மாநாட்டில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறியப்படுகின்றது.

தமிழர்கள் அதிகமாக வாழும் ரொரன்ரோ பெரும் பாகத்தில் மட்டும் 20 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன. மற்றும் மொன்றியல், ஒட்டாவா, வன்கூவர், கல்கரி, எட்மிண்டன், வோட்டலூ, வினிப்பெக், கோன்வல், கலிபக்ஸ் போன்ற கனடாவின் பாரிய நகரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.காலை 9 மணி முதல் மாலை 9 மணிவரை தொடர்ச்சியாக 12 மணித்தியாலங்கள் மக்கள் வாக்களிக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டமைப்பு மேலும் அறிவித்துள்ளது.

அத்துடன் வாக்களிக்க வரும்போது மக்கள் கொண்டு வரவேண்டிய அடையாள ஆவணங்கள் குறித்தும் அவ்வமைப்பு மேலும் அறிவித்துள்ளது. அது குறித்த விபரங்களையும், வாக்களிப்பு நிலையங்களின் விபரங்களையும் அவ்வமைப்பின் இணையத்தளம் www.tamilelections.ca இல் நீங்கள் பார்க்கலாம்.

0 Responses to கனடாவில் தமிழர் தேர்தல் பல்லாயிரக்கணக்கானோர் வாக்களிப்பு சிறிலங்காவின் பொய் பிரச்சாரம் - மக்கள் ஆவேசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com