"போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நான் நீதிமன்றம் செல்லவேண்டிய நிலை வந்தாலும் நான் வழிநடத்திய படையினரை நீதிமன்றம் செல்ல விடமாட்டேன். ஆனால், படைநடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது அதில் தலையிட்ட அரசு தரப்பினரை நான் காப்பற்றப்போவதில்லை" - என்று எதிர்க்கட்சிகளின் பொதவேட்பாளார் சரத் பொன்சேகா விசேட செவ்வி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
அவர் தனது செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
" நான் இராணுவத்தில் பணியாற்றியது போரை வெல்வதற்கே தவிர், நல்ல நட்பை அங்கு சம்பாதிக்கவேண்டும் என்பதற்கு அல்ல. போரை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்துடனேயே நான் பணியாற்றினேன். இராணுவத்தில் எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. இராணுவத்தில் தொழில்பக்தி இல்லாத பலரை நான் ஓரம்கட்டினேன்.
" நான் நல்ல இராணுவ அதிகாரிகளை தேர்வு செய்தேன். அவர்களுடன் சேர்ந்து போரை நடத்தினேன். வெற்றி பெற்றோம். எல்லா இராணுவ அதிகாரிகளையும் சமாளிக்கவேண்டும் என்பதற்காக நான் பணியாற்றியிருந்தால், இராணுவத்தில் கடமைக்காக பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் பலர் சந்தோஷமாக தமது சேவையிலிருந்துகொண்டு காலம்தள்ளியிருப்பார்கள். ஆனால், கடந்த காலங்களில் நடைபெற்றதைப்போல போரை வென்றிருக்க முடியாது.
"போரிலே எனது படையினர் குற்றங்கள் எதனையும் இழைக்கவில்லை. மிகுந்த ஒழுக்கத்துடன் அவர்கள் தமது பணியை செய்தார்கள். அதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அவர்களது நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பவர்கள் அல்லது அவர்களை குற்றஞ்சாட்டுபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு பதிலளிப்பதற்கு நான் தயார். அவ்வாறு கேள்வி கேட்பவர்களிடமிருந்து ஒழிந்து ஓடுவதற்கு, எனது படைகள் எந்த குற்றத்தையும் புரியவில்லை. அப்படியிருக்கையில், எனது படையினர் தொடர்பான விமர்சனங்களை திறந்த மனதுடன் எதிர்கொள்வதற்கு நான் தயார்.
" எனது படையினருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டையும் பொறுப்பேற்று சர்வதேச நீதிமன்றம் வரை செல்வதற்கு நான் தயார். ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலர் தனது பொறுப்புக்களுக்கு மேலதிகமாக இராணுவ தளபதியின் நடவடிக்கைகளில் தலையிட்டு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நான் பொறுப்பேற்கப்போவதில்லை. அவரை பாதுகாப்பதற்காக நான் எவரிடமும் கெஞ்சப்போவதுமில்லை. அதற்கான தேவையும் எனக்கு இல்லை"
- என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைக்காக நான் செல்வேன், படையினரை விடமாட்டேன்