Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா இராணுவத்துள் பிளவு?

பதிந்தவர்: தம்பியன் 21 December 2009

சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பிளவு தோன்றியுள்ளதாகவும் இது காலப்போக்கில் வன்முறையாக வெடிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாக பெருமளவான இராணுவ அதிகாரிகள் அணிதிரண்டுள்ளதுடன் மகிந்தவுக்கு ஆதரவாகவும் ஒரு அணியினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முப்படை தளபதிகளுக்கும் இடையிலும் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாகவே இராணுவ முகாம்களுக்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்ளும் ராஜபக்ஸ சகோதரர்கள் படையினர் மத்தியில் பல்வேறு பிரசார உத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவ உயரதிகாரிகளை அலரி மாளிகைக்கு அழைத்து மகிந்த விருந்தளித்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஏவ்வாறாயினும் சிறீலங்காவில் இராணுவ புரட்சி ஒன்று ஏற்படுவதற்கு வழியில்லா விட்டாலும் காலப்போக்கில் இராணுவத்துக்கிடையிலான மோதல்கள் ஏற்படுதற்கான சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கில்லையென ஆய்வாளர் ஓருவர் தெரிவித்தார்.


1 Response to சிறிலங்கா இராணுவத்துள் பிளவு?

  1. hahaha Says:
  2. ya haaa good news

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com