Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிலாபம் பிரதேசத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் காரியாலயமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் நேற்றைய தினம் மாலை மாரவில பகுதியில் அங்குரார்ப்பணம் செய்யப்படவிருந்த தேர்தல் பிரச்சாரக் காரியாலயமே இவ்வாறு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் குறித்த கட்சிக் காரியாலயம் தீ வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to சிலாபத்தில் ஐ.தே.கட்சி காரியாலயம் தீக்கிரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com