Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தன்னை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுவருவதாக அரச தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழ்வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தன்னை உடனடியாக இந்தியாவுக்கு திரும்புமாறு பசில் ராஜபக்சவிடமிருந்து தொடர்ந்து அழுத்தங்கள் வந்துகொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில் - வடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகளை நான் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக என்னை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டுவருகிறது. தேர்தலிலிருந்து விலகும்படி அரச தரப்பிலிருந்து எனக்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டவண்ணமுள்ளது.

மகிந்தவும் பொன்சேகாவும் என்னை சந்திக்கப்போவதாக அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். தமிழ் மக்களை கொன்றுகுவித்த அவர்களின் அந்த இரத்தக்கறைபடிந்த கரங்களை குலுக்கி என்னால் அவர்களை சந்திக்கமுடியாது.

நான் இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு வரும்போது, எனக்கு சிறிலங்காவில் உயிராபத்து ஏற்பட்டால் அதற்கு சிறிலங்கா அரசே பொறுப்பு என்று சர்வதேச அமைப்புக்களிடம் அறிவித்துவிட்டுத்தான் வந்தேன்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிற்குள் காணப்படும் பிரச்சினைகள் குடும்ப பிரச்சினைகள் போன்றவை. அவற்றை நாளையே நாம் களைந்துகொள்வோம். அதற்குள் திட்டமிட்டு பிளவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களை தமிழ்மக்கள் தூக்கி எறியவேண்டும் - என்றார்.

0 Responses to என்னைக் கொலை செய்ய திட்டம்: சிவாஜிலிங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com