Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள மயமாக்கப்படும் தமிழ் பெண்கள்

பதிந்தவர்: தம்பியன் 20 December 2009

திருமலை மாவட்டத்தில் சில வங்கிகளில் கடமைபுரியும் தமிழ் பெண்கள் மீது வலுக்கட்டாயமான முறையில் சிங்கள கலாசார பாரம்பரியங்கள் திணிக்கப்படுவதாகத் தெவிக்கப்படுகிறது.

இந்த வங்கிகளில் கடமை புரியும் தமிழ்ப் பெண்கள் தமது சமூகம் சார்ந்த உடைகளை அணியக்கூடாதெனவும் சிங்கள பாரம்பரிய உடைகளே அணிய வேண்டுமெனவும் அவர்களது நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் வாடிக்கையாளர் வங்கிகளுக்குள் நுழையும் போது கூட "வணக்கம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஆயுபோவன்'' சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை கந்தளாய் குளத்தைக் கட்டியவர் குளக்கோட்டன் என்பதனை மறைக்கும் வகையில் அந்தக் குளத்தைச் சிங்களவர் ஒருவரே கட்டியதாக வலிந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெவிக்கின்றன.

நன்றி: சங்கதி

0 Responses to சிங்கள மயமாக்கப்படும் தமிழ் பெண்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com