நேற்று ஞாயிற்றுக்கிழமை யேர்மனி முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் மீதான மீள் வாக்குகணிப்பில் 99,2 வீதமான யேர்மன்வாழ் தமிழ்மக்கள் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.யேர்மனி முழுவதும் வாக்களித்த 23089 வாக்காளர்களில் 22904 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 136 வாக்காளர்கள் இல்லை என்றும் 49 வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன.
இதன் படி வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு 99,2 வீதமான மக்கள் ஆம் என்றும் 0,59 வீதமான மக்கள் இல்லை என்றும் வாக்களித்ததுடன் 0,21 வீதமான வாக்குகள் செல்லுபடியாற்றதாக பதிவாகியுள்ளதாக தேர்தல்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



0 Responses to தனித்தமிழீழ அரசை நிறுவுவதற்கு 99,2 வீதமான யேர்மன்வாழ் தமிழ்மக்கள் விருப்பம் தெரிவிப்பு