சிறிலங்காவை விட்டு வெளியேறும் அரசியல்வாதிகள் தொடர்பான விவரங்களை பெற்றுக்கொள்வதற்கும் அவர்களை நாட்டை வெளியேறுவதை தடுப்பதற்கும் குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழு ஒன்று காவல்துறை பொறுப்பதிகாரி ஒருவரின் தலைமையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வந்திறங்கும் அரசியல்வாதிகள் தொடர்பான விவரத்தை குடிவரவு அதிகாரிகள் உடனடியாக குற்ற புலனாய்வு பிரிவினருக்கு அறிவிக்கவேண்டும் என்று விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தேர்தலில் படுதோல்வியடைந்ததை அடுத்து அவருக்கு ஆதரவளித்த கட்சிகளை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலரும் நாட்டை விட்டு வெளியேறவதற்கு திட்டமிட்டுள்ளார்கள் என்று அரசுக்கு கிடைத்த தகவலை அடுத்து குற்ற புலனாய்வு பிரிவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to அரசியல்வாதிகளை நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்க கட்டுநாயக்கவில் குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழு