Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொள்ளுப்பிட்டி ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் நேற்றுமுன்தினம் முதல் தங்கிருந்த பொன்சேகாவை இராணுவத் தரப்பு நேற்றுக்காலை முதல் வெளியில் வரமால் தடுத்துவைத்திருந்த நிலையில், நேற்று இரவு அவர் அங்கிருந்து வெளியேறித் தமது வீட்டுக்குச் சென்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் உட்பட அனைத்தையும் அரசு விலக்கிக் கொண்டுள்ளது என அவர் ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு தமது பாதுகாப்பு நீக்கப்பட்டிருக்கின்றமை தமது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமனிதராக எவ்வித பாதுகாப்புமின்றி நேற்று இரவு ஹோட்டலை விட்டுப் புறப்பட்ட பொன்சேகாவின் கார் சோதனையிடப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, தன்னை படுகொலை செய்வதற்கு அரசு தரப்பு திட்டம் தீட்டியுள்ளதாகவும் அதன் ஒரு கட்டமாகவே தேர்தல் முடிவுகள் வெளியாகம் முனனரே தான் தாங்கியுள்ள ஹோட்டலை இராணுவத்தினரை பயன்படுத்தி சுற்றிவளைத்துள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலர், தன்னை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளார் என்று ஹோட்டலிலிருந்து பொன்சேகா தெரிவித்திருந்தார்.

0 Responses to ஹோட்டலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்ட பொன்சேகா தனிமனிதராக நேற்றிரவு வீடு சென்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com