Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக தமது பூர்வீக தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டுமானால் அது அந்நிய சக்திகளிடம் அவர்கள் இழந்த இறைமையை மீளப்பெற்று அமைக்கும் சுதந்திர தமிழீழத்தில் தான் முடியும்.

இறுதியாக பிரித்தானியரிடம் இருந்து தங்களின் சுதந்திரத்தை மீளப்பெற்றுக்கொண்ட சிங்கள தேசம் அதே நாளில் தமிழரின் தாயகத்தை வன்பறிப்பு செய்தது. இன்று தமிழர்கள் மீது இனப்படுகொலையை யார் அதிகமாக அரங்கேற்றியது என்ற போட்டியில் சிங்கள தேசம் பிளவுபட்டுள்ளது. தற்சமயம் தமிழ் பேசும் மக்களின் சுதந்திர போராட்ட வடிவங்கள் மாறியுள்ள நிலையிலும், தாயகத்தில் முழு இனமும் அடிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையிலும் தமிழ் பேசும் மக்களை தன்மானத்தோடு அவர்களது பூர்வீக தாயகத்தில் வாழவைக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் புலம் பெயர் வாழ் தமிழர்களுக்கே உண்டு.

டென்மார்க் வாழ் தமிழீழ மக்களே

தமிழினத்தின் இழந்த இறைமையை மீளப்பெற்றிட குரல்கொடுப்பதுடன், தமிழர் நிலத்தை சிங்கள தேசம் வன்பறிப்பு செய்த நாளாம் பெப்ரவரி 4ம் நாளை கரிநாளாக நினைவுகூறுவோம். சிங்கள தேசம் தமிழர் மீது நடாத்தும் இனப்படுகொலையை டென்மார்க் வாழ் மக்களுக்கு அம்பலப்படுத்துவோம்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என ஒன்றாய் கூடி குரல்கொடுப்போம். எமது இலட்சியத்தில் நியாமுள்ளது. எமது உடலில் உண்மையின் பலமிருக்கு. நாம் வீழமாட்டோம். ஏத்தனை முறை விழுகிறோம் என்பது முக்கியமல்ல அத்தனை முறையும் எழுந்திருக்கிறோம் என்பது தான் முக்கியம். ஆம் நாம் விழ விழ எழுவோம்.

ஒழுங்கமைப்பு:

டென்மர்ர்க் தமிழர் பேரவை உடன் இணைந்து,

டென்மார்க் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம்

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

தமிழீழ பெண்கள் அமைப்பு

தமிழர் புனர் வாழ்வுக் கழகம்

திசைகள் - தமிழ் இளையோர் அமைப்பு

மேலதிக தொடர்புகளுக்கு: 0045 5217 3671

0 Responses to சுதந்திர தமிழீழத் தாகத்துடன் டென்மார்க்கில் பேரணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com