இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என்று இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சி.பி.ஐ. கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சி.பி.ஐ. காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் இருநாடுகளின் தூதரகங்களின் ஊடாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்கா அரசு அறிவித்தவுடன் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக சிறிலங்கா அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.



0 Responses to பிரபாகரனின் இறப்பு சான்றிதழை சிறிலங்கா இன்னமும் தரவில்லையாம்: சி.பி.ஐ. தெரிவிப்பு