Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த ராஜபட்சே மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொல்ல அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா சதி செய்ததாக இலங்கை பாதுகாப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளன.

பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இதைத் தெரிவித்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள், ராஜபட்சே மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொல்ல பொன்சேகா சதி செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளளனர்.

அதிபர் ராஜபக்சேயையும், அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்ய முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா சதித்திட்டம் தீட்டியதாக அரசு கூறியுள்ள புகாரை, அவர் மறுத்து உள்ளார். "ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக குற்றம்சாட்டி என்னை கைது செய்வதற்காக என் மீது சுமத்தப்பட்ட வீண் பழி இது என்று சரத் பொன்சேகா கூறினார்.

"எனது பாஸ்போர்ட் கறுப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருப்பதால், நான் நாட்டை விட்டு வெளியேற முடியாது'' என்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to கறுப்பு பட்டியலில் பொன்சேகாவின் பாஸ்போர்ட்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com