சிறிலங்காவின் ஆறாவது அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அமோக வாக்குகளை பெற்று வெற்றிநடை போடுகிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளர் சரத் பொன்சேகாவைவிட 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அதிகமாக பெற்றுள்ள மகிந்த, இதுவரை முடிவுகள் வெளியான தேர்தல் தொகுதிகளில் 90 விழுக்காடுக்கு மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றுள்ளார்.வாக்குகள் எண்ணும் பணி துரித கதியில் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறத்தில் தொகுதிவாரியான முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதுவரை எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளில் காலி, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து தொகுதி முடிவுகளும் வெளியாகியுள்ளன. இந்ந மூன்று மாவட்டங்களிலும் மகிந்த ராஜபக்சவே வெற்றிபெற்றுள்ளார். இன்னும் 19 மாவட்டங்களை சேர்ந்த தொகுதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இதுவரை வெளியான தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச 33 லட்சத்து 87 ஆயிரத்து 605 வாக்குகளையும் பொன்சேகா 21 லட்சத்து 23 ஆயிரத்து 815 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இதுவரை முடிவுகள் வெளியான ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளில் ஈ.பி.டி.பி.யின் கட்டுப்பாட்டில் உள்ள ஊர்காவற்றுறையைவிட மிகுதி இடங்களில் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் மன்னாரிலும் முல்லைத்தீவிலும் பொன்சேகாவே வெற்றிபெற்றுள்ளார். வவுனியா முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை. அம்பாறை திகாமடுல்ல தொகுதியில் சரத்பொன்சேகாவே வெற்றிபெற்றுள்ளார். திருகோணமலையிலும் மூதூர் தொகுதியில் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார்.
தமிழர் தாயகத்தில் ஊர்காவற்றுறையைவிட முடிவுகள் வெளியான தொகுதிகள் எவற்றிலும் மகிந்த ராஜபக்ச வெற்றிபெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.



0 Responses to சிங்கள தேசத்தில் வெற்றிநடை போடுகிறார் மகிந்த