Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்துள்ள சரத் பொன்சேகா வெளிநாட்டில் தஞ்சம் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆளும் சுதந்திரா கட்சி தலைமையிலான கூட்டணி வேட்பாளராக அதிபர் ராஜபக்சே களம் இறங்கி இருக்கிறார். இலங்கை ராணுவத்தின் முன்னாள் தலைமை தளபதியான சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தி உள்ளன. இலங்கை அதிபர் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குகள் எண்ணப்படும் பணி தொடங்கியது. இதில் தற்போதைய அதிபர் ராஜபக்சே 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே சரத் பொன்சேகா நேற்று நள்ளிரவு ரகசியமாக வெளியேறி கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் 120 பாதுகாவலர்களுடன் தங்கி உள்ளார். அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பதட்டம் நிலவுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள பொன்சேகா, அமெரிக்காவில் தங்சம் அடைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0 Responses to வெளிநாட்டில் தஞ்சம் அடைய பொன்சேகா திட்டம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com