Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் எனவும், அவரது எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தப் படும் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. தேவை ஏற்படின் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அவதானம் செலுத்தி வருகிறது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பிலிப் க்ரோலி தெரிவித்துள்ளார்.

அரசதலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும், மாகாண ரீதியான அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் கவனிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான அரசதலைவரின் முனைப்புக்கள் வரவேற்கத்தக்கவை என்றும், தொடர்ந்தும் அமெரிக்கா, அரசதலைவர் மஹிந்த ராஜபஷவுடன் இணைந்து செயற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 Responses to பொன்சேகாவின் பாதுகாப்பை உன்னிப்பாக அவதானிப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com