Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமைச்சு பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவரது தொண்டர்களதும் ஆதரவாளர்களதும் கோரிக்கைக்கு இணங்க தனது முடிவை மீள்பரிசீலனை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அரசஅதிபர் மகிந்தவுக்கு ஆதரவளிக்காததை அடுத்து, தமிழ் மக்கள் தன் மீது நம்பிக்கையிழந்த பின்னர் அவர்களின் பிரதிநிதியாக பதவி வகிப்பதில் அர்த்தமில்லை என்று தெரிவித்த டக்ளஸ், அமைச்சு பதவியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதற்கு உத்தேசித்திருந்தார் என்று நேற்று செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால், அவரது அந்த முடிவுக்கு கட்சி ஆதரவாளர்களும் தொண்டர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் அவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து தனது முடிவை மீள் பரிசீலனை செய்யப்போவதாகவம் தற்போது அவர் கூறியுள்ளார்.

0 Responses to பதவி விலகும் முடிவை தொண்டர்களின் கோரிக்கைக்கு இணங்க மீள்பரிசீலனை செய்யப்போகிறாராம் டக்ளஸ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com