Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரசன்னத்துக்கான காலம் கனிந்துள்ளது. வயதில் இளையவரான ராதிகாவை இந்தத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் புதிய சனநாயகக் கட்சியை பலப்படுத்துவதோடு தமிழர்கள் வேண்டிநிற்கும் அமைதி மற்றும் நீதி ஆகியவற்றுக்குக் குரல் கொடுக்கும் ஒருவரையும் உங்களால் உருவாக்க முடியும்”.

- இவ்வாறு புதிய சனநாயக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான யக் லேயிட்ரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய சனநாயகக் கட்சி சார்பில் ஸ்காபரோ றூச் றிவர் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் ராதிகா சற்சபேசன் அவர்களை ஆதரித்து அய்யப்பன் கோயில் அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு யக் லேயிட்ரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மங்கள விளக்கை யக் லேயிட்ரன், நக்கீரன், பீட்டர் யூலியன் ஆகியோர் ஏற்றி வைத்தார்கள். கனடிய தேசியப் பண்ணும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பிரவிதா ஜெயகாந்தன் அவர்களால் பாடப்பெற்றன. அதன்பின்னர், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள், இந்திய சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்குப் பலியான பொதுமக்கள் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யக் லேயிட்ரன் அங்கு பேசும் போதுஇலங்கையில் நடைபெற்ற கொடுமையான போருக்குப் பின்னர் அங்கு அப்பாவிப் பொதுமக்கள் முட்கம்பிச் சிறைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். வெளியில் விடப்பட்டவர்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்படாமல் மீண்டும் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் இலங்கை அரசோ அவர்கள் மீள் குடியமர்த்தப் பட்டுள்ளார்கள் என்றும் அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொய் கூறி வருகின்றது.

"எனவே நான் இன்றைய தினம் கனடிய அரசிற்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். வவுனியாவிலும் ஏனைய இடங்களிலும் சிறைகளில் வாடும் தமிழ் மக்களை சென்று பார்ப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலர்கள் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படுவதற்குரிய அழுத்தத்தை இலங்கை அரசிற்கு கனடியப் பிரதமர் கொடுக்க வேண்டும். அங்கு மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்என்றார்.






நன்றி: ஈழநேஷன்

0 Responses to கனடிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரசன்னத்துக்கான காலம் கனிந்துள்ளது: புதிய சனநாயக கட்சித் தலைவா யக் லேயிட்ரன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com