அவர் அங்கு மேலும் கூறுகையில் - நாடாளாவிய ரீதியில் எனக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்துள்ளார்கள். என் மீதான தமது நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்கள். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்றவனாக அவர்களுக்கு சேவையாற்றுவதற்கு நான் எப்போதுமே தயாராக உள்ளேன்.
நடந்து முடிந்த தேர்தலில் எனக்கு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே எமக்கு தெரிந்த விடயம். அந்த வாக்காளர்களின் நம்பிக்கையும் அவர்கள் ஜனநாயகத்தில் காட்டிய விருப்பமும் அரச அடக்குமுறையினால் காவு கொள்ளப்பட்டுள்ளது.
எனக்கு ஆதரவளித்த அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவேன். நான் போட்டியிட்ட தேர்தல் சின்னமான அன்னம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த - பரீச்சயமான - சின்னம். அந்த சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்கு சேவையாற்றுவேன்.



0 Responses to எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதாக பொன்சேகா அறிவிப்பு