அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றாலென்ன தோல்வியடைந்தாலென்ன அவருக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது. தேர்தலில் வாக்களிக்காத ஒருவர் அரசதலைவராக வரமுடியாது. அதேவேளை, அவ்வாறான வேட்பாளர் தேர்தலில் போட்டியிடவே முடியாது.
நாம் இதனை கூறுவதால் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார் என்று அர்த்தமாகாது. எமது வெற்றியில் எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. ஆனால், இவ்வாறான வேட்பாளர் ஒருவருக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது.
பொன்சேகா வாக்களிக்காதமை பிரச்சினைக்குரிய விடயமல்ல என்று தேர்தல் ஆணையாளர் தனது கருத்தை கூறியிருக்கிறார். ஆனால், இந்த விடயத்தை சட்ட ரீதியாக அணுகும்போது அது பொன்சேகா செய்த பிழையாகவே பார்க்கவேண்டியுள்ளது. அதனையே நீதிமன்றத்தின் ஊடாக நாம் நிரூபிக்கவுள்ளோம் - என்று கூறினார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவின் ஆதரவாளரும் முன்னாள் நீதியரசருமான சரத் என் சில்வா இது பற்றி கருத்து தெரிவிக்கையில் -
பொன்சேகா அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது அதனை தேர்தல் ஆணையாளர் ஏற்றுக்கொண்டதன் மூலம் பொன்சேகாவுக்கான தேர்தலில் போட்டியிடும் உரிமை சிறிலங்கா சட்டங்களின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. இதற்கு பின்னர் இந்த விடயத்தில் சர்ச்சைப்பட்டுக்கொள்ளவேண்டிய எந்த தேவையும் இல்லை என்று கூறியுள்ளார்.



0 Responses to தேர்தலில் வாக்களிக்காத பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அரசு அறிவிப்பு