Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு பாரிசில் கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 17ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 24.01.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 16.00மணிக்கு நடைபெற்றது.

ஈகைச்சுடரேற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றது.

கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த சிறப்புரைகள் இடம்பெற்றதோடு விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் பல ஆற்றல்மிகு போராளிகளை இனங்காட்டி இருக்கின்றது. சிறந்த இராஜதந்திரிகளை உருவாக்கியிருக்கின்றது.தலைமைத்துவப் பண்புள்ளவர்களை இனங்ககண்டு அவர்களைப் பயன்படுத்திப் பெருமை சேர்த்திருக்கின்றது. இந்த வரிசையில் அனைத்துத் துறைகளிலும் ஒரு சேரப் பிரகாசித்தோர் ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் கேணல் கிட்டு அவர்களுமாவார். எதனைச் செய்வதானாலும் நேர்த்தியாகச் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டைக் கொண்ட அவர், மக்களுக்காக அண்ணனோடு வாழ்ந்த போதும் தனது வாழ்வை முடித்துக்கொண்ட இறுதிக் கட்டத்திலும் தனக்குத் தரப்பட்ட பணியை நேர்த்தியாகச் செய்து முடித்தவர்.

மாலை 19.00மணிக்கு தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எனும் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.





0 Responses to கேணல் கிட்டு வணக்க நிகழ்வு: பிரான்ஸ் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com