Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சின் கிழக்குப் பாகத்திலிருக்கும் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் 31.01.2010 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் விழா நடைபெற்றிருந்தது. ஐரோப்பியத் தமிழர் ஒன்றியமும், தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய இந்த விழாவில் பிரஞ்சுப்பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு. அர்னோல்ட் யுங் அவர்களும், திரு. மோறர் அவர்களும், ஸ்ராஸ்பூர்க் மாநகரசபை சபை உதவி முதல்வர் திரு. எறிக் எல்குபி அவர்களும், .திருமதி..சைலர் அவர்களும், இசைக்கல்லூரி இயக்குனர் திரு. ஜெரர்தன் அவர்களும், அருட்தந்தை ஜெராட் அவர்களும், எழுத்தாளர் நாகரெத்தினம் கிருஷ்ணா அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

பாரளுமன்ற உறுப்பினர் அர்னோல்ட் யுங் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், அல்சாஸ் வாழ் தமிழ் மக்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி எனவும், சிறிலங்காவில் கடந்த வருடத்தின் வசந்தகாலப்பகுதியில் வன்னிப் பகுதியில் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியிருந்ததாகவும், தற்போதும் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அடிப்படை வதிகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் வாழ்ந்துவருகின்ற நிலை மிக மிக வேதனைக்குரியது எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்றைய நாளில் பிரான்சின் வெளிநாட்டு வெளிவிவகார அமைசர் பெர்னாட் குஷ்னர் அவர்களிடம் மூன்று விடயங்களைக் கோருவதாகவும்

1. சிறிலங்காவில் தமிழ் மக்கள் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன என பெர்னாட் குஷ்னர் அவர்கள் அறிவிக்கவேண்டும் எனவும்,

2. பிரான்சினால் வளங்கப்படுகின்ற அத்தியாவசிய தேவைகள் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நகரங்கள் முதற்கொண்டு கிராமங்கள் வரை தொடர்ந்தும் சென்று கொண்டிருக்க வேண்டும் எனவும்,

3. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு உடனடியாக வளங்கப்படவேண்டும். சிறிலங்கா என்ற நாட்டில் தமிழ் மக்களுக்கான பகுதியில் அவர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்.
இவ்வாறான மூன்று கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாக உறுதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வளர்ந்து வருகின்ற சமுதயம் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வளங்கியிருந்தார்.

திரு. மோறர் அவர்கள் உரையாற்றுகையில் சிறிலங்காவில் தமிழ் மக்களினுடைய இன்றைய நிலையைக் கண்டு தாம் மிகுந்த வேதனையடைவதாகவும் தன்னால் முடிந்த அளவு சக பாராளுமன்ற உறுப்பிர்களுடன் இணைந்து குரல் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

தமிழ்ச்சோலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மண்டபத்தை நிறைத்திருந்த, தமிழ், பிரஞ்சுமக்களுக்கு மிகுந்த மகிழ்வையும், நெகிழ்வையும் கொடுத்திருந்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் என்றபாடலுடனும், எழுச்சி முழக்கத்துடனும் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.







0 Responses to பிரான்ஸ்: ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடைபெற்ற பொங்கல் விழா (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com