உலகில் பிறக்கிற்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் மரணம் என்பது சர்வ நிட்ச்சயமானது. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான காலமே ஒரு மனிதனின் வாழ்நாளாக அமைகிறது.அது சிலருக்கு நீண்ட நெடியதாகவும் சிலருக்கு குறுகியதாகவும் அமைந்து விடுகிறது. குறிப்பிட்ட இந்தக் காலத்தில் மனிதன் வாழும் வாழ்க்கையே அவன் இறந்ததும் மறைந்து விடுகிறானா? அல்லது இறந்த பின்னும் வாழ்கிறானா? என்பதை முடிவுசெய்கிறது. துரதிஸ்ட்டவசமாக எமதருமை நண்பன் முத்துக்குமாரின் வாழ்நாள் குறுகியது தான் ஆனால் அவன் இறந்தும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனங்களில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.
தமிழீழ விடுதலை வரலாற்றில் நண்பன் முத்துக்குமாருக்கென ஒரு தனியிடம் உண்டு. மாவீரர்களின் நடுவிலே அவனும் ஒரு மாவீரன் ஆவான். திலீபன் அண்ணாவிற்கு அருகிலே அன்னை பூபதியின் மடியிலே அவன் ஓய்வு எடுத்துக்கொண்டு அவன் எமக்கு விட்டுச்சென்ற பணியினை நாம் சரியாக முன்னெடுக்கின்றோமா என பார்த்துக்கொண்டிருக்கின்றான்.
ஈழம் எரிந்த போது அரசியல் தலைவர்கள் மேடைகளில் முழங்கியபோதும் உண்ணாவிரதம் ஈழத்தமிழருக்கான போராட்டம் என்று பாசாங்கு செய்த போது மக்கள் செய்வதறியாது விழித்த போது தமிழ் நாட்டு அரசு மௌனமாக இருந்த போது உலக நாரீக சமுதாயம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவேளை விடுதலை தீயானன் எமதருமை நண்பன்.
இன்று ஆண்டொன்றாய் ஆனது. எம் நண்பன் எமக்கு விட்டுச்சென்ற பணியினை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும. முத்துக்குமார் தொடக்கம்முருகதாஸ் வரையிலும் விடுதலை தீயிற்கு உரமிட்டார்கள் அவர்கள இட்ட அந்த உரத்திலேயிருந்து உரக்க கூறுவோம் விழ விழ எழுவோம் சாம்பலில் இருந்து உயித்தெழுவொம் ஆண்ட தமிழினம் மீண்டுமொருமுறை ஆளும் வரை விடுதலை தீ எரிந்துக்கொண்டே இருக்கும்.
எம் தலைவன் வருவான் வழிகாட்ட அவ்வழி நடப்போம் விதலையென்னும் கிரிடத்தை தமிழ் மக்கள் சூட்டுவார்கள். அந்நாள் வரை போராட்டம் தொடரும். விடுதலை வீரனும் தியாகியும் மாவீரனுமான எமதருமை நண்பனுக்கு எழும் தமிழர் இயக்கத்தின் வீரவணக்கம்
நன்றி
எழும் தமிழ் இளைஞர் இயக்கம்
"கெடல் எங்கும் தமிழர் நலம் - அங்கெல்லாம் சென்றுகிளர்ச்சிசெய்வோம்"



0 Responses to வணக்கம் விடுதலை தீயே: எழும் தமிழ் இளைஞர் இயக்கம் (படங்கள்)