அரசதலைவர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கொழும்பில் தலைமறைவாகியுள்ளார். தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலேயே அவர் தலைமறைவாகியுள்ளார் என்று தெரியவருகிறது.ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலிலிருந்து கொழும்பு குவீன்ஸ் வீதியிலுள்ள - றோயல் கல்லூரிக்கு - முன்பாக உள்ள தனது வீட்டுக்கு நேற்று முன்தினமிரவு எந்த பாதுகாப்பும் இன்றி தனியாக சென்ற பொன்சேகா, தற்போது அந்த வீட்டில் உள்ளாரா என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று கேட்டதற்கு - பாதுகாப்பு காரணங்களையிட்டு பொன்சேகா எங்குள்ளார் என்ற விடயம் தெரிவிக்கப்படமாட்டாது என்று பொன்சேகாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொன்சேகாவுக்கு அரச வழங்கிய பாதுகாப்பு அனைத்தையும் இன்று வாபஸ் பெறுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ள பொன்சேகா, இந்தியாவிடம் உதவி கேட்டிருப்பதாக கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்தது.



0 Responses to சரத் பொன்சேகா கொழும்பில் தலைமறைவு!