Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு சிங்க கொடிகளை வியாபார நிலையங்களிலும் பொதுநிறுவனங்களிலும் மட்டுமல்லாது ஒவ்வொரு வீடுகளிலும் ஏற்றுமாறு ஈபிடிபியின்தொண்டர்கள்வற்புறுத்தி வருவதாக யாழ் தகவல்க்ள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாளை சிறிலங்காவின் பிரதான எதிர்கட்சிகள் அனைத்தும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில் தமிழர் தேசங்களில் தமது சிங்கள மேலாண்மையை காட்டுவதற்கான முயற்சிக்கு ஈபிடிபி தொண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ் குடாநாட்டில் குறிப்பிட்டளவு வாக்குகளை கூட மகிந்தவுக்கு பெற்றுக்கொடுக்க முடியாத நிலையினால் தென்னிலங்கை அரசியற் கட்சிகள், ஈபிடிபியை ஒரு பொருட்டாக கருதவேண்டியதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும், அதனால் தான் தற்போது சுதந்திர நாளை அனைத்து இடங்களிலும் கட்டாயப்படுத்தி கொடி ஏற்றிவைத்து தனது பலத்தை காட்ட முற்படுவதாகவும் மேலும் அறியவருகின்றது.

0 Responses to யாழ் குடாவில் சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கு சிங்க கொடியேற்றுமாறு ஈபிடிபி அறிவுறுத்தல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com