Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகெங்கும் வாழும் எம் இனிய தேசத்து உறவுகளே!

கோண்டாவில், யாழ்ப்பாணம், (பெப்ரவரி 01, 2010) - தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு, இன்றைய கால சூழலுக்கு தகுந்தவாறு மீள் உருவாக்கம் பெற்று, "உதவி" எனும் பெயரில் ஒரு புதிய திட்டத்துடன் மீண்டும் எம்மவர் மத்தியில் எமது உறவுகளுக்கான பணியினை ஆரம்பித்துள்ளது.
நாலாங்கட்ட ஈழ யுத்தத்தின் கொடூரங்களும் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளும் அனைவரும் அறிந்த விடயமே. சொல்லவெண்ணா துயரங்களுக்குள் ஆழ்த்தப்பட்ட எம் இனிய உறவுகளுக்கு ஏழு மாத காலங்கள் ஆன பின்பும் கூட நாளாந்த வாழ்க்கையே ஒரு பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

தமது இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளா வண்ணம், ஒன்றன் பின் ஒன்றாக, சோகமும், துன்பமும் எம் இனத்தை மீளமுடியாது சூழ்ந்துள்ளது. 1990 களின் யாழ்ப்பாண இடப்பெயர்வு முதல், சமீப காலத்தில நிகழ்ந்த வான் தாக்குதல்கள், மாதாந்த இடப்பெயர்வுகள். யுத்தம் என மீண்டும், மீண்டும் எம் மக்களின் வாழ்வாதாரம் சீர் குலைக்கப்பட்ட நிலையில், அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட எம் மக்கள் தமது இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது ஒரு நெடுந்தூரக் கனவாகவுள்ளது.

இத்தகைய நேரத்தில் எமது உறவுகளின் வாழ்வில் ஒளியேற்றும் தீபங்களாக திகழ வேண்டிய பணி நம்மைச் சார்ந்தது. இந்த எண்ணத்தையே மூல மந்திரமாகக் கொண்டு தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு, எம் இனத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு "உதவி" எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத் திட்டத்திற்காகவென www.uthavy.com எனும் இணையத்தளத்தினூடாக, புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியை தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு நாடியுள்ளது. இவ்விணையத்தளம், புலம்பெயர் வாழ் தமிழர்கள் பங்களிப்பதற்கென சிறந்ததோர் வாய்ப்பை அமைத்துக்கொடுத்துள்ளது.

"உதவி" எனும் திட்டம் கடந்த ஆண்டின் இழப்புக்களில் இருந்து மீள முடியாது தவிக்கும் எமது தேசத்து உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவென யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ஒரு முயற்சி.

புலம்பெயர் வாழ் உறவுகளின் ஆதரவுடனும், தாயகத்தில் உள்ள எமது செயற்பாட்டாளர்களின் துரிதமான ஈடுபாடுடனும் "உதவி" தனது இலக்கை நோக்கிச் செல்லவுள்ளது.

இங்கனம்,

"உதவி"

திட்ட ஒருங்கிணைப்பாளர்

தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பு

கோண்டாவில்,

யாழ்ப்பாணம்

www.uthavy.com

contact@uthavy.com

0 Responses to தாயக ஏதிலிகள் நலன் பேணும் அமைப்பின் புதுத் திட்டம் அறிமுகம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com