Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க அந்த முன்னணி தீர்மானித்துள்ளது. முன்னணியின் பிரதித் தலைவராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நியமிப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்;.

ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து அமைப்பாளர் பதவியொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சரத் பொன்சேக்காவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அவர் அரசதலைவர் தேர்தலில் அன்னப்பறவைச் சின்னத்தில் தான் போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் கீழ் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து தேர்தலில் நிற்க எண்ணியிருப்பதாகவும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஊடாக போட்டியிடுவதென அதில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகள் நேற்று தீர்மானித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், சிறிலங்கா முஸ்லிம் காங்கிஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம், சிறிலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் அமைப்பு தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 Responses to பொதுதேர்தலில் பிரதமர் வேட்பாளராக ரணில்: எதிர்கட்சிகளின் பிரதிதலைவர் பொன்சேகா!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com