எதிர்வரும் 4ம் திகதி சிறீலங்கா சுதந்திரமடைந்து 62 வருடம் பூர்த்தியடைகின்றது. இந்த 60 வருட கால அறவழி மற்றும் மறவழிப் போராட்டங்கள் ஊடாக போராடியும், தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, மற்றும் சமூக உரிமைகள் இன்று வரை பாதுகாக்கப்படவில்லை.பிரித்தானிய காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்றபோதும், ஈழமக்களைப் பொறுத்தவரையில் அடிமை வாழ்வு தொடரவே செய்கின்றது. அந்தவகையில் சிறீலங்காவின் சுதந்திரத்தின நாளான நாளை 4ம் திகதி நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனியீர்ப்பு போராட்டமொன்று மாலை 18.00 மணிதொடக்கம் 19.00 மணிவரை இடம்பெறும்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
ஈழமக்கள் அவை
நோர்வே.



0 Responses to நோர்வேயில், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்