Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கணனி மென்பொருள்(soft ware) ஒன்றை உபயோகித்து வாக்குகள் எண்ணி வீதாசாரத்தில் உள்ளிடப்படும் கணனியில் அவற்றை மாற்றம்செய்து, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பசில் தில்லுமுல்லு பண்ணியதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசர அவசரமாக சில நிலையங்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கணனி மயப்படுத்தப்பட்டதும் யாவரும் அறிந்ததே. பிறிதொரு இடத்தில் இருந்து ஏற்கனவே உள்ளிடப்பட்ட தரவுகளை மாற்றியமைத்து, அந்த வீதத்தில் மாறுதலை ஏற்படுத்தி இத் தேர்தலில் மோசடிமூலமே மகிந்த வென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் கணனிகள் உபயோகிக்கப்படாத சில இடங்களிலேயே சரத் பொன்சேகா வென்றிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலிலும் இந்த மென்பொருளைப் பாவித்து தமக்குத் தேவையான அமைச்சர்களை வெல்லவைக்கவும் முடியும் அதேவேளை தோல்வியடையச் செய்யவும் முடியும் என பசிலுக்கு நெருங்கிய நண்பர்கள் பேசிவருவதால், பல ஆளும் கட்சி அமைச்சர்கள் தமது எதிர்கால இருப்பு தொடர்பாக அஞ்சிவருவதாக அறியப்படுகிறது. இவற்றை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இவர்கள் அல்லாடுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: அதிர்வு

0 Responses to ஆளும் கட்சி அமைச்சர்களில் வயிற்றில் புளியைக் கரைக்கும் பசில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com