Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியின் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளும், சிறுவர் பரமரிப்பு வசதிகளும் மிகவும் குறைவாக உள்ளதுடன், பெருமளவான குடிமனைகள் முற்றாக அழிந்தும், கடுமையாக சேதமடைந்தும் உள்ளதாக ஐஆர்ஐஎன் செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது.

அதன் தமிழ் வடிவம் வருமாறு:

ஒரு வருடத்திற்கு முன்னர் உள்நாட்டுப் போர் வடபகுதியில் உள்ள வசந்திகுமாரியின் வீட்டுக்கு அண்மையாக நகர்ந்திருந்தது. அப்பா வெளியில் சென்றிருந்தார். அந்த சமயம் மிகப்பெரும் வெடியோசை கேட்டது என குமாரி (21) எம்மிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் நாம் அப்பாவை உயிருடன் பார்கவில்லை. எமது தந்தையாரைப் புதைப்பதற்கு கூட எமக்கு நேரம் கிடைக்கவில்லை, நிலமை அவ்வளவு பயங்கரமாக இருந்தது.

ஒரு கிடங்கை வெட்டி அவரின் உடலை அதற்குள் போட்டுவிட்டு நாம் இடம்பெயர்ந்தோம். -9 நெடுஞ்சாலையில் உள்ள கிரமமான புளியங்குளம் பகுதியில் குமாரி தனது தாயாருடனும், சகோதரனுடனும் வாழந்து வருகிறார். இருண்டு தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதி வாரங்களில் இதுவே முன்னனி நிலையாக இருந்தது.

அவரின் தந்தையாரின் மரணத்தின் பின்னர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் ஆழமான பகுதிகளுக்கு அவர்கள் சென்றிருந்தனர். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் அவர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றிருந்தனர்.

சிறீலங்கா அரசு 280,000 மக்களை தடுத்து வைத்திருந்த ஒரு டசினுக்கு மேற்பட்ட முகாம்களில் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். ஜனவரி மாதம் அவர்கள் தமது கிராமத்திற்குத் திரும்பும் வரையிலும் வவுனியாவில் உள்ள அந்த முகாம்களிலேயே தங்கியிருந்தனர்.

மெனிக் பாஃம் முகாமில் சந்தித்த பின்னர் திருமணம் செய்துகொண்ட அவரின் புதிய கணவர் விவசாயம் செய்து வந்தவர். ஆனால் தற்போது வரையிலும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

சில வயல்களில் தற்போதும் கண்ணிவெடிகள் உள்ளன, சிலவற்றில் அவை அகற்றப்பட்டுள்ளன. ஆனாலும் விவசாயத்தை ஆரம்பிக்க எம்மிடம் நெல் விதைகளோ அல்லது பசளைகளோ இல்லை.

எனினும் எமக்கு முக்கியமாக தேவைப்பட்டது தங்குமிடம் தான். நாம் எமது வீட்டுக்கு திரும்பிய போது அங்கு கல்குவியல்களை தான் கண்டோம். எல்லாம் போய்விட்டது என குமாரி தெரிவித்தார்.

-9 நெடுஞ்சாலையை அண்டிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களினால் பல ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். ஆனால் குமாரி மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பிய போது அவருக்கு இரு தகரத் தகடுகளே வழங்கப்பட்டிருந்தன. அவரின் மண்குடிசைக்கு கூரையை அமைப்பதற்கு.

நாம் புதிய குடும்பம் என்பதால் எல்லாவற்றிற்கும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என குமாரி தெரிவித்தார். அவரின் தாயும், சகோதரனும் அதனை ஒத்த மற்றுமொரு குடிசையில் அருகில் வசித்து வருகின்றனர்.

பல தடைகள் இருந்தாலும் மேலும் பலர் தமது கிராமங்களுக்கு திரும்பியுள்ளனர். இங்கு வாழக்கை கடினமானது, எனினும் முகாம்களில் நாம் வெளியில் செல்ல முடியாது. குளிப்பதும், ஏனைய அன்றாட கடமைகளை மேற்கொள்வதும் அங்கு கடினமானது. தற்போது எமக்கு ஓரளவு சுதந்திரம் உள்ளது என தனது கிராமத்திற்கு திரும்பிய மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளக அமைப்புக்கள் கடந்த 15 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின் படி வன்னியில் பெருமளவான குடிமனைகள் முற்றாக அழிந்தும், கடுமையாகச் சேதமடைந்தும் உள்ளன.

மக்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களில் மக்களின் அவசர தேவைகளை நிறைவுசெய்வதுடன், அவர்களின் தேவைகளுக்கான உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என அனைத்துலக குடிவரவு அமைப்பு தெரிவித்துள்ளது. மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களில் இந்த அமைப்புக்கே செல்லும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வன்னியின் கிராமப்புறங்களில் சுகாதார வசதிகளும், சிறுவர் பரமரிப்பு வசதிகளும் மிகவும் குறைவாக உள்ளதாக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. சில பாடசாலைகளே மீள திறக்கப்பட்டுள்ளன.

158,000 இற்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் தமது கிராமங்களுக்கு திரும்பிவிட்டதாகவும், மேலும் 106,000 மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் .நா அலுவலகத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வன்னியில் குடிமனைகள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன - ஐ.ஆர்.ஐ.என்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com