Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று 04.02.2010 பேர்லின் மாநகரில் இலங்கை இனபிரச்சனை பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இக் கருத்தரங்கு "போருக்கு எதிரான தாய்மார்கள்" எனும் யேர்மனிய அமைப்பாலும் பேர்லின் வாழ் இளையோராலும் ஒழுங்கு செய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் பேர்லின் இளையோர்களால் பல்லின மக்களுக்கு தற்காலிக இலங்கை சூழ்நிலை எடுத்துரைக்கப்பட்டது. அதை தொடர்ந்து இலங்கை உலகஅரசியல் கட்டமைப்பில் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதும் ஓர் ஆய்வின் மூலம் சொல்லப்பட்டது.

இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமிழ் மக்கள் பட்ட, படுகின்ற அவலத்தை கேட்டறிந்து மிகவும் கவலையடைந்தார்கள். சிறிலங்கா தனது 62ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளையிலும் அங்கு வாழும் மக்கள் முற்கம்பிவேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நிலமையை வருகைதந்திருந்த பல்லின மக்கள் உணர்ந்துக்கொண்டனர்.

இக் கருத்தரங்கின் இறுதியில் ஈழத்தமிழர்கள் தனித்துவமான மக்கள் என்றும் சுதந்திரமாகவும், சமாதானமாகவும் சுயநிர்ணய உரிமையோடு வாழ்வதற்கு உலக நாடுகள் ஒத்துழைக்கவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது.

0 Responses to பேர்லின் மாநகரில் இலங்கை இனபிரச்சனை பற்றிய கருத்தரங்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com