தமிழர் தாயகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என இந்தியா வழமைபோன்று தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பூட்டான் சென்றுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா மற்றும் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த விடயம் இந்தியத் தரப்பால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மீள் குடியேற்றம் பற்றி மட்டுமே அடிக்கடி பேசிவரும் இந்தியா, மக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளில் அக்கறை காட்டாது, மருத்துவத் தேவைகளுக்காக இந்தியா செல்லும் ஈழத்தமிழர்களைக்கூட திருப்பி அனுப்பி வருகின்றது.
இதேவேளை, கடந்த பொதுத் தோ்தலில் மகிந்த அரசு வெற்றி பெற்றதற்கும், வெளிவிவகார அமைச்சராக பிரிஸ் நியமிக்கப்பட்டதற்கும் இந்த சந்திப்பில் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.



0 Responses to இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டுமாம்: இந்தியா