Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளை வான் ஒன்றில் கடத்தப்பட்ட யுவதி ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் துன்னாலைப் பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக் கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நெல்லியடியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரஸ்தாப யுவதி துன்னாலையில் உள்ள கலிகைக் கந்தன் ஆலய மாலைத் திருவிழாவுக்காகச் சென்றுள்ளார். இதன்போது வெள்ளை வானில் வந்த சிலர் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட யுவதியிடமிருந்த தங்க நகை களையும் சைக்கிளையும் பறிமுதல் செய்த கடத்தல்காரர்கள் யுவதியை தாக்கி கழுத்தை நெரித்தபோது அவர் மயக்கமடையவே துன்னாலைப் பகுதியிலுள்ள பற்றைக்குள் எறிந்து விட்டுச் சென்றுள்ளனர்.

மறுநாள் விழித்துக் கொண்ட பிரஸ்தாப யுவதி, அயலவர்களின் உதவியுடன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இது குறித்துப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

உடனடியாகச் செயற்பட்ட நெல்லயடிப் பொலிஸார் நெல்லியடி இராசகிராமத்தில் உள்ள வீடொன்றில் இருந்த பெண் உட்பட இருவரைக் கைது செய்ததுடன் கடத்தப்பட்ட யுவதியின் சைக்கிள் மற்றும் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

0 Responses to கடத்தப்பட்ட யுவதி மயங்கிய நிலையில் மீட்பு: வடமராட்சியில் பரபரப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com