தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக விளங்கிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் தற்போது ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. என முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கே.சிவாஜிலிங்கம் கனடா உதயன் இதழுக்கு தெரிவித்துள்ளதாவது:-தலைவர் பிரபாகரன் அவர்களின் வல்வெட்டித்துறை பிறந்த இல்லம் சில மாதங்களுக்கு முன்னர் தென்னிலங்கையிலிருந்து வடக்கு நோக்கி வந்த சிங்கள மக்களுக்கு ஒரு காட்சிப் பொருளாகவும் உல்லாசப் பயணத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒரு இடமாகவும் அமைந்திருந்தது.
ஆனால் தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே காட்சியளிக்கின்றது. தற்போது என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. இவ்வாறு முன்னாள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது தனது பிறந்த பூமியான வல்வெட்டித்துறையில் வாழ்ந்து வருபவருமான திரு சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தலைவர் பிரபாகரன் அவரது தாயார் பார்வதி அம்மாள் பற்றி கேட்டபோது இலங்கையில் வல்வெட்டித்துறையில் பார்வதி அம்மாளை கவனித்து அவரை பராமரிப்பதற்கு பலர் தயாராக இருந்தாலும் வெளிநாட்டில் உள்ள அவரது பிள்ளைகளும் அதை விரும்புகின்றார்கள் என்றும், எனினும் கனடா போன்ற நாடுகள் அனுமதிக்காத வேளையில் இது சாத்தியமாக வாய்ப்பு இல்லை என்றார் சிவாஜிலிங்கம்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்த வீடு பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அந்த புனிதமான வீடு இராணுவத்தினரால் உடைக்கப்படுவது குறித்து தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் வடபிராந்திய இராணுவ உயர் அதிகாரிக்கும் உடனடியாக அறிவித்ததாகவும் ஆனாலும் அவர்களின் அசமந்தப் போக்கு அந்த நினைவுச் சின்னத்தை நாசமாக்கி தற்போது அந்த இடம் ஒரு கற்குவியலாகவே காணப்படுவதாகவும் திரு சிவாஜிலிங்கம் கவலையுடன் தெரிவித்தார்.



0 Responses to தேசியத் தலைவரின் இல்லம் கற்குவியலாக காட்சியளிக்கின்றது