Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவின் பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேவின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. ஊடகங்கள்மீது தாக்குதலை நடாத்திய மேவின் சில்வாவுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும் எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்புத் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அண்மைக் காலமாக, தாமும் இலக்குவைக்கப்படலாம் என்ற அச்சத்தில் ஊடகவியலாளர் பலர் சிறிலங்காவைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

2007 டிசம்பரில் மேவின் சில்வாவும் அவரது ஆதரவாளர்களும் அரச தொலைக்காட்சி நிறுவனத்தினுள் புகுந்து ரூபவாகினி கூட்டுத்தாபன பணியாளர்கள்மீது தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

'எந்தவொரு நாட்டில் தீயை அணைப்பதற்குத் தீக்குச்சியைப் பயன்படுத்துவார்கள்?', என எல்லை கடந்த ஊடகவியலாளர் அமைப்பு தனது பத்திரிகை அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்து, தாக்குதலை மேற்கொண்ட ஒருவருக்கு இத்தகைய அமைச்சுப் பதவியை வழங்கியிருப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் உண்மையான உள்நோக்கம் என்ன என்பது தொடர்பான சந்தேகங்களை எழுப்புவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஊடகவியலாளர்கள்மீது தாக்குதலை நடாத்தும்;, அவர்களுக்கு ஆபத்தாக விளங்கும் மோசமான நாடுகளுள் ஒன்றாக சிறிலங்காவும் விளங்குவதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. 2006 முதற்பகுதியிலிருந்து 14 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சிறிலங்காவில் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

0 Responses to மேவின் சில்வா பிரதி ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com