Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யுத்தம் முடிந்த கையோடு யாழ்.குடாநாட்டில் சமூகச் சீரழிவுகள் மேலெழுகை பெற்றுள்ளன. யுத்தத்திற்குப் பயந்த மக்கள் இப்போது சமூகச் சீரழிவுகளுக்கு அஞ்சும் அபாயம் வேகமெடுத்துள்ளமை வேதனைக்குரிய செய்தி.

தமிழர்கள் துன்பப்படும் தலைவிதிக்கு ஆட்பட்டவர்கள் என்பது போல நிலைமை நாளுக்கு நாள் மோசமடைகின்றது. கடத்தல், பாலியல் வல்லுறவு என்ற கொடூரங்கள் இத்துணை தூரம் மோசமடைவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ந்தால், மூல காரணம் பெற்றோர்கள் என்பதே முடி பாகும். ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் பிள்ளைகளின் நடத்தைகள் பற்றி அறியாதவர்களாக இருப்பது மிகப் பெரும் குறைபாடாகும்.

இந்தக் குறைபாடு பின்தங்கிய-கலாசாரப் பிறழ்வுடைய, கசிப்பும், தூ¬ வார்த்தை களும், ஒழுங்கற்ற நடத்தைகளும் உடைய சூழமைவில் மிக அதிகம் எனலாம். தனது பிள்ளை, தனது மனைவி, தனது குடும்பம் என்ற கரிசனை எதுவுமற்ற தந்தை ஒருவரால் தீய பழக்கத்தை உள்வாங்கக் கூடிய பிள்ளையை மட்டுமே உருவாக்க முடியுமேயன்றி, வேறு எதனைத்தான் செய்ய முடியும்?

இதேபோன்று கசிப்புக் காய்ச்சி அதனை ஊற்றி விற்கும் பெண் ஒருவரால் அந்தச் சமூ கத்தை சீரழிக்க முடியுமேயன்றி ஒருபோதும் காப்பாற்ற முடியாது. இந்த உக்கிரமான கொடுமைகள் எங்கள் யாழ்.குடாநாட்டில் ஊருக்கு ஊர், பிரதேசத்திற் குப்பிரதேசம் தாராளமாக உண்டு. இதை நாம் மறந்து சிந்திப்பது மடமைத்தனமாகும்.

கடத்தல், பாலியல் வல்லுறவு என்ற சமூகச் சீரழிவுக்கு சாதியம் என்ற கொடும்பேய் குழை அடித்து கலையாட வைக்கின்றது. இவர்களுக்கு நாம் எந்தப் புத்தியையும் சொல்ல முடி யாதென்ற அறிவியல் கூட்டம் ஒருபுறம், உவர்களுக்கு என்ன தெரியும்? இவர்கள் யார் எங்களுக்குச் சொல்வது? என்ற அறியாமையின் ஆணவச் செருக்கு மறுபுறம்.

இதற்கிடையே போதையேற்றும் கையடக்கத் தொலைபேசிகள், இவற்றுக்கு அனுப்பப்படும் விரசமான படங்கள். இதற்குள் மூழ்கி சமூக ஒழுங்கை இம்மியும் சிந்திக்காமல் குச்சொழுங்கைகளில் கூடி நின்று மற்றவர்களையும் பழு தாக்கும் இளவல்களின் நிட்டூரம்.

அப்பாடா! எப்படித்தான் இந்த நாசங்கள் அறுபடப் போகின்றது? இது பற்றிப் பலரும் சிந்திக்க வேண்டும். பெற்றோரின் பொறுப்பு என்பதில் ஆரம்பித்து இளைஞர்களுக்கான கல்வியறிவு, கணனி அறிவு, கருத்தரங்கு, காத்திர மான விழிப்புணர்வு, வேலை வாய்ப்பு, பயன் உள்ள பொழுதுபோக்கு, சமூகச் சீரழிவைத் தடுக்கும் இளைஞர் குழுக்கள் என்ற நீண்ட தொரு திட்டத்தை நிலைநிறுத்தினால், எங்கும் ஒழுங்கு, எதிலும் ஒழுங்கு என்று சங்கே முழங்கும்.

0 Responses to சமூகச் சீரழிவில் தோற்றுவாய் பாரீர்: வலம்புரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com