சிறீலங்காவில் இடம்பெறும் தவறான ஆட்சிமுறை மற்றும் காவல்துறை நிர்வாகத்திற்கு எதிராக மக்கள் மிகுந்த வெறுப்படைந்துள்ளதாக கொங்கொங்கை தளமாக கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் மையம் தகவல் வெளியிட்டுள்ளது.காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் நீதிக்கு புறம்பான கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவற்றால் பல ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையினருக்கு எதிராக நாடுமுழுவதும் மேற்கொண்டிருந்ததாக தெரியவருகிறது,
இவர்கள் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற போரை காரணம் காட்டியே வன்முறைகளுக்ககு விளக்கமளித்துவந்ததாகவும் இவை அரசியல்வாதிகளின் நலன்சார்பாக அமைந்ததாகவே இருந்தது என்பதுவும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஆனால் இது தற்போதும் தொடர்வது மக்களிடம் வெறுப்பையும் ஆத்திரத்தையும் அதிகரிக்கச்செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.



0 Responses to காவல்துறையினருக்க எதிராக பொதுமக்களின் வெறுப்பு அதிகரித்து செல்கின்றது