Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாகி திலீபனின் நினைவுத்தூபி உடைப்பிற்கும் இராணுவத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று யாழ்.51ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சரத் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகர் சந்திப்பு ஒன்றில் பங்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்..

திலீபனின் தூபி உடைக்கப்பட்ட சம்பவத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நாம் அவ்வாறு இழிவாக நடந்து கொள்ளமாட்டோம்.

அதனை உடைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை.

அதனை நாம் ஏன் செய்யவேண்டும்? அதனால் எமக்கு என்ன லாபம்? அவ்வாறான செயல்களை நாம் ஒருபோதும் செய்யமாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

0 Responses to திலீபனின் நினைவுத்தூபியை தாம் உடைக்கவில்லயாம்; இராணுவம் சொல்கிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com