தமிழ்த் தேசியத்தை முழுமையாக நேசிப்பதாகவும், தேசியத்திற்காக உழைப்பதாகவும் கூறிவரும் ஊடகங்கள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அகவை நிறைவில் மௌனம் சாதிக்கும் இன்றைய பொழுதில் அவர்களின் தியாகங்களிற்கு மதிப்பளித்துக் கௌரவிப்பதில் தமிழ்வின் ஊடகமும் அதன் வாசகர்களும் ஆத்ம திருப்தி கொள்கிறார்கள்.
தமிழர்களிற்கென தனியான ஒருதேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப்போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படைய வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னூதரணமாகத் திகழ்ந்தவர்கள்.
உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபுவழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின் படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.
அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்டமுறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.
இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப்படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சாள்ஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப்படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னபல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.
குறிப்பாக ஈழப்போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப்பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிகநேர்த்தியாக தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.
போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70க்கு மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்த தமிழீழ விடுலைப்புலிகளின் போராட்ட வரலாற்றின் பின்னடைவிற்கான காரண கர்த்தாவாக பேச்சுவார்த்தைக் காலத்திலான சர்வதேச மயப்படுத்தலும். உள்ளக சதிகளும் இடம்பெற்றிருந்தன.
ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் அறிவிக்கும் வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.



0 Responses to தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அகவை 38