Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆண்டு வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பாரிய இன அழிப்பு நடவடிக்கை நடைபெற்று ஆண்டு ஒன்று நிறைவடைந்து வருகின்ற இந்த மாதத்தில் தமிழகத்தின் சினத்திரை நட்சத்திரங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்காக யாழ்ப்பாணம், வவுனியா வருகின்றனர் என்ற செய்தி தாயக மக்களை மிகக் கவலைக்குள் தள்ளியுள்ளது.

வன்னி அழிப்பின் ஓராண்டினை பாரிய விழாக்களாக ஏற்பாடு செய்து சிங்கள அரசு முன்னெடுத்துவருகின்ற நிலையில் அதன் ஒழுங்குபடுத்தலில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்படாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இந்திய திரைப்படங்களை உலககவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கோடு நடாத்தப்படும் சர்வதேச இந்தியன் பிலிம் அகடமி விருதுகள் (International Indian Film Academy – IIFA Awards) விழாவினையும் இலங்கையில் நடத்த சிங்கள அரசு மேற்கொண்ட முயற்சி கைகூடியுள்ளது. ஆனாலும் அந்த நிகழ்வினை தமிழ் உணர்வுள்ள தமிழக திரைத்துறையினர் தமது நலனினை தூக்கியெறிந்து புறக்கணித்துள்ளனர். இதேபோன்று தமிழக அரசியல் தலைவர்களும் இந் நிகழ்வினை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

ஆனால் தமிழ் மக்கள் தமது உயிர்களை பல்லாயிரக்கணக்கில் பறிகொடுத்த வடக்கு மண்ணில் அந்த பலி கொடுப்பின் ஓராண்டு நிறைவு நடக்கும் அதே மாத்தில் சிங்கள அரசு மேற்கொள்ளும் கேளிக்கை நிகழ்வில் பங்குகொள்ள தாய்த் தமிழகத்தில் இருந்து சின்னத்திரை நட்சத்திரங்கள் படை எடுத்திருப்பது தாயக மக்கள் மனங்களில் வேதனையைத் தோற்றுவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் தெரியாமலேயே இந்தநிகழ்வில் பங்கெடுக்க சின்னத்திரையினர் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இது குறித்து தமிழ் உணர்வாளர்களுக்கும், திரைத்துறையினருக்கும் தெளிவுபடுத்த அவர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்விற்கான விளம்பரத்தினை புலர்வு தனது செய்தியில் இணைத்துக் கொள்கின்றது.

2 Responses to வன்னி பேரழிவுக் கொண்டாட்டத்தில் தமிழக சின்னத்திரை

  1. வணக்கம்,

    தங்கள் தளத்திலும் புலிகளின்குரலுக்கு,
    நிதி திரட்ட முயற்சிக்கின்றீர்கள். மிகவும் நல்ல விடயம்,
    ஆனால் புலிகளின்குரல் சிற்றலையில் வரவில்லையானால் அதற்கான பொறுப்பினை நீங்களும்
    சேர்ந்தே ஏற்க நேரிடும். அந்த வானொலிக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகள், அர்ப்பணிப்புக்களை கவனத்தில் எடுத்து சிற்றலை வானொலி வர வற்புறுத்துங்கள்.

    ஒரு சிலர் வானொலியின் பெயரைப் பயன்படுத்த மக்களிடம் சுரண்ட அனுமதிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    நன்றி வன்னியூரான்.

     
  2. வன்னியூரான் இதை பார்த்தால் உங்களுக்கு விளங்கும்.

    http://pulikalinkural.com/paypal-donation.htm

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com