Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆஸ்திரேலியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது இந்தோனேஷிய கடற்படையினரால் பிடிக்கப்பட்டு மெராக் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் இந்தோனேஷியாவில் இறக்கப்பட்டவர்களில், மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் புறப்பட்டு வந்த தமிழர்களில் இருவர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்.

பாண்டி என்றழைக்கப்படும் திலீப்குமார் லக்ஸ்மன், பகீரதன் ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர்கள் ஆவர் என்று அவர்களின் நண்பர் ஒருவர் மூலம் அறியவந்துள்ளது.

மெராக் துறைமுகத்தில் பல மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டு, ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷிய அரசுகளின் உத்தரவாதங்களின் அடிப்படையில் 254 தமிழர்கள் கப்பலிலிருந்து இறக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் பலர் சிறிலங்காவுக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் அபாயம் காணப்பட்டது.

இதனையடுத்து, அவ்வாறு கப்பலால் இறக்கப்பட்ட பலர் மீண்டும் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். இவ்வாறு புறப்பட்டவர்களில் கடந்த வாரம் 12 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இவர்களில் ஈழத்தமிழர்களும் ஆப்கான் நாட்டவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to அவுஸ்திரேலியா சென்ற 12 பேர் கடலில் மூழ்கி பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com