யூன் 20ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை கனடா தழுவி நடைபெற்ற கனடியத் தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் வரலாறாக 29035 பேர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியத் தமிழர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மாலை 9 மணியுடன் வாக்களிப்பு முடிவுக்கு வந்தாலும், திங்கள் அதிகாலை 4 மணிவரை வாக்குக்களை எண்ணும் பணி தொடந்துள்ளது. தமிழர்கள் அதிகம் வாழும் ரொரன்ரோ பெரும்பாகப் பகுதியில் 29 வாக்களிப்பு நிலையங்கள் அமைந்திருந்தன.
இவற்றில் 8 வாக்களிப்பு நிலையங்களில் மின்கணணி வாக்கும் எண்ணும் இயங்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. காலை 9 மணிக்கு ஆரம்பித்த வாக்களிப்பில் பெரும் எண்ணிக்கையிலான வாக்களார்கள் வாக்களிப்பின் பின்பகுதியிலேயே வாக்களித்ததால் முதலில் மாலை 9 மணிவரை 8 வாக்களிப்பு நிலையங்களில் எண்ணப்பட்ட 11,544 வாக்குகளின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
தொடர்ந்து எனைய வாக்களிப்பு நிலையங்களில் இறுதிவரை அளிக்கப்பட்ட வாக்குகள் எட்டு கணணி இயந்திரங்கள் மூலம் காலை 4 மணிவரை எண்ணப்பட்டன. ரொரன்ரோ பெரும்பாகத்தில் 26,842 வாக்காளர்களும், மொன்றியலில் 1712 வாக்காளர்களும், ஒட்டாவாவில் 65 வாக்காளர்களும், கோன்வலில் 189 வாக்காளர்களும், குவெல்வில் 165 வாக்காளர்களும், எட்மிண்டனில் 62 வாக்களுர்களுமாக 29035 வாக்கார்கள் வாக்களித்துள்ளனர்.
தேசிய மற்றும் மாகாணப் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரங்களும் தேர்தல் ஆணையகத்தின் இணையத்தளத்தில் உத்தியோகப்பற்றற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 48 மணித்தியாலங்களுக்குள் உத்தியோகப+ர்வமாக தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட டெல்டா விடுதி நிகழ்வில் பல கனடிய அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரiயாற்றினர்.
அத்துடன் வாக்களிப்பின் போதும் பல கனடியப் பிரமுகர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று தேர்தல் முறைமைகளை, பார்த்து பெரு மகிழ்ச்சி வெளியிட்டதை காணக்கூடியதாக இருந்தது.



0 Responses to வரலாறாக 29035 கனடிய தமிழர்கள் கனடிய தமிழர் தேசிய அவைக்கு வாக்களித்தனர்